பொலன்னறுவை மாவட்டத்தில் 40 இலட்சம் கிலோவுக்கும் அதிகமான நெல்லை பதுக்கி வைத்திருந்த இடைத்தரகர்களின் 6 களஞ்சியசாலைகளுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் சீல் வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
சீல் வைக்கப்பட்ட களஞ்சியங்களிலுள்ள நெல் இருப்புக்களை உத்தரவாத விலையில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு விற்பனை செய்வதற்கு இடைத்தரகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இல்லையென்றால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நெல்லை தொடர்ந்து சேமித்து வைக்கும் இந்த நபர்களுக்கு அரச வங்கிகளில் இருந்து பெரிய தொகை கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அரிசியின் விலையை அதிகரிக்கும் நோக்கத்துடன் சேமிக்கும் இந்த தனிநபர்களுக்கு வாய்ப்பளிக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.