சுயகட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் – மட்டக்களப்பு அரசாங்க அதிபர்-கே.கருணாகரன்

உறவுகள், உரிமைகள் என்பதைவிட சுயகட்டுப்பாடுகளை அரசாங்க உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் பின்பற்ற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று (25) புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மட்டக்களப்பு மாவட்டத்தில் சில அரசாங்க உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறி கவனையீனமாக நடந்துகொள்வதாக பொலிஸாரினால் சுட்டிக்காட்டப்பட்டதற்கு இணங்க கட்டுப்பாடுகளை மிகவும் இறுக்கமாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

உறவுகள், உரிமைகள் என்பதைவிட சுயகட்டுப்பாடுகளை அரசாங்க உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் பின்பற்றவேண்டியதன் அவசியத்தினை உணர்ந்துகொள்ளவேண்டும்.

இது மிகவும் கொடூரமான அலை இலங்கை உட்பட உலக நாடுகளில் பரவிவருகின்றது.
ஆகவே இந்த ஊரடங்கு சட்டத்தினை கடைப்பிடித்து சுகாதார துறையினருக்கு ஒத்துழைத்து நாங்களும் சுயகட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால்தான் நாங்கள் இந்த தொற்றினை கட்டுப்படுத்த முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து வைத்தியசாலைகள் ஊடாக எந்தவேளையிலும் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
புதியது பழையவை