புகைபிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துவதன் காரணமாக கொரோனாத் தொற்று உறுதியாகும் வீதம் அதிகரிக்கின்றது.
இவ்வாறு சுகாதார அமைச்சின் கொரோனா சம்பந்தமான பிரதான இணைப்பாளரும் சுகாதார சேவைகள் தொழிநுட்பப் பிரிவின் பணிப்பாளருமான வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
குறித்த செயற்பாடுகள் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நாட்டில் நாளாந்தம் 16 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் புகைப்பிடித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் தரவுகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாளாந்தம் 15 வயதுக்குக் குறைவான சுமார் 4 ஆயிரம் சிறுவர்கள் புகைபிடித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமையும் தெரியவந்துள்ளது.