சீனாவிலிருந்து மேலும் ஒருதொகை sinopharm தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளன

நாட்டுக்கு மேலும் ஒரு தொகை sinopharm கொரோனா தடுப்பூசிகள் இன்று கொண்டுவரப்பட்டுள்ளன.

இதன்படி, சீனாவின் பீஜிங் நகரிலிருந்து 18 இலட்த்து 60 ஆயிரம் தடுப்பூசிகள் இன்று(08) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக, எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த தடுப்பூசிகள், ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL – 869 எனும் விமானம் ஊடாக, கொண்டுவரப்பட்டுள்ளன.

இதன்படி, கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகள் விமான நிலையத்தின் பொருட்கள் களஞ்சியப்படுத்தும் நிலையத்தில் வைக்கப்பட்டதாக, எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.
புதியது பழையவை