G 20 சர்வமத மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் நாடுதிரும்பியுள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்கவிமான நிலையம் நோக்கி பயணித்த விமானமூடாக நாடுதிரும்பியுள்ளதாக விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இத்தாலி சென்றிருந்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே உள்ளிட்ட குழுவினர் அண்மையில் நாடு திரும்பியிருந்தனர்.
இதேவேளை G 20 சர்வமத மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் கடந்த 10 ஆம் திகதி இத்தாலி பொலக்னா நகருக்கு பயணித்தமை குறிப்பிடத்தக்கது.