நாட்டில் முடக்க நிலையை தளர்த்துவது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்


சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறக்க முடியும் என தான் நம்புவதாக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காண அதிகளவில் பீசீஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பைஸர், மொடர்னா, எஸ்ட்ராசெனேக்கா, சினோபாம் உட்பட அனைத்து தடுப்பூசிகளும் செலுத்தும் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நேற்று முன்தினம் வரையில் 1,190,6104 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் நாட்களில் சில கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை திறக்க முடியும் என நம்புவதாக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர்ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை