யாழ்ப்பாணம் – மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மாதகல் கிழக்கு ஜெ 150 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 3 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் இன்று (திங்கட்கிழமை) காலை நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்தது.
அளவீட்டு பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக குறித்த இடங்களில் ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தள்ளனர்.