சிறுவனை கத்தியால் குத்திவிட்டு கைபேசியைக் கொள்ளையடித்த கும்பல்

யாழில் வீதியால் சென்றுகொண்டிருந்த சிறுவனை வழிமறித்து, கத்தியால் குத்திவிட்டு தொலைபேசியைக் கொள்ளையிட்டு சென்ற வழிப்பறிக் கொள்ளை கும்பலைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.

குறித்த கொள்ளைச் சம்பவம் சுன்னாகம் – தாவடி பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது.

மருதனார்மடம் பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுவன் ஒருவன் தொலைபேசியில் பேசியபடி அன்றைய தினம் சைக்கிளில் சென்றுள்ளார்.

இதன் போது அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் குறித்த சிறுவனைக் கத்தியால் குத்திவிட்டு தொலைபேசியைப் பறித்துச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை