மட்டக்களப்பில் -புகையிரத விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு- கொழும்பு புகையிரத விபத்தில் இளம் குடும்பஸ்தரரான ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது செவ்வாய்க்கிழமை இரவு (28) 8.30 மணியளவில் ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 29 வயதுடைய இரட்னகுமார் டினேஷ்ராஜ் என்பவரே உயிரிழந்ததாக அடையாளங்காணப்பட்டுள்ளது.

மேசன் தொழிலாளியான இவர் தனது உறவினர் ஒருவரை சந்திப்பதற்காக புகையிரதப் பாதையைக் கடக்கும் போது புகையிரதத்தில் மோதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர்ப் பொலிஸார் அவரது குடும்ப உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
புதியது பழையவை