குருணாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடவல்பொல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்னொருவர் உள்ளடங்கலாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றுள்ளதுடன், பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 60 வயதுடைய குருணாகல் மற்றும் ஹட்டன் பகுதியை பதிவிடமாக கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் வீட்டின் அறையொன்றை 6 அடி ஆழத்திற்கு இயந்திரத்தினால் துழையிட்டுள்ளமை இதன்போது கண்டுபிடிக்கப்டப்டுள்ளது.
இந்நிலையில் சந்தேக நபர்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.