உத்தரதேவி நகர்சேர் கடுகதி ரயிலுடன் வனவாசல ரயில் நிலையத்துக்கு அருகாமையில் காரொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உத்தரதேவி நகர்சேர் கடுகதி ரயிலுடன் இன்று நண்பகல் 12.45 க்கு குறித்த கார் மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து காரணமாக கார் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், கார் தீப்பற்றியமையின் காரணமாக காருக்கு பாரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





