கதிர்காமத்தில் ஜனாதிபதி, பிரதமர் வழிபாடு


கிரிவெஹரவிலிருந்து கதிர்காமம் பெரிய கோயிலை நோக்கிப் புறப்பட்ட ஜனாதிபதிக்கு, அங்கிருந்த மலர் வியாபாரிகள் மலர்களை வழங்கி மகிழ்ந்தமை விசேட அம்சமாகும். 

மேலும், கிரிவெஹெர விஹாரையில் திரண்டிருந்த மக்களுடன் சுமூகமாகப் பேசிய ஜனாதிபதி, அம்மக்களின் நலன் குறித்தும் விசாரித்தனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் பெரிய கோயில் வளாகத்திலுள்ள அஷ்ட விருட்சங்களுக்கு முன்னால் இடம்பெற்ற பிரித் பாராயண நிகழ்விலும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இந்தப் பிரித் பாராயணத்தில், மஹா சங்கத்தினர் நானூறு பேர் கலந்து கொண்டிருந்தனர்.

புதியது பழையவை