அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடிநிலம் பகுதியில் முதலை கடித்ததில் 4 பிள்ளைகளின் தந்தை புதுவருடமான இன்று(01-01-2022) சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,
குடிநிலத்தில் வசிக்கும் இராசநாயகம் விநாயகமூர்த்தி (வயது 55) என்பவர் தாலிபோட்டாறு ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத நிலையில் முதலை கடித்து இழுத்துள்ளது.
குறித்த நபரின் கால் பகுதியில் முதலை பலமாக கடித்து இழுத்த போது பலத்த போராட்டத்திற்கு மத்தியில் உடலை முதலையிடமிருந்து அதை கண்டவர்கள் மீட்டுள்ளனர்.
புதுவருடமான இன்று நடந்த துயர சம்பவம் ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

