மட்டக்களப்பு - கொழும்பு வீதியின் ஊறணி சந்தியில் மோட்டார் சைக்கிளொன்றும், கோழி இறைச்சிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (02)அதிகாலை 5.00 மணியளவில் இவ்விபத்து ஏற்பட்டுயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற பெண் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


