அவிசாவளை − கரவனெல்ல வைத்தியசாலையில் நோயாளர் ஒருவர் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக ருவன்வெல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், கடகஸ்தெனிய பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.