காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.100,000 கொடுப்பனவு-அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஒரு தடவை கொடுப்பனவாக 100,000 ரூபாவை வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இழப்பீட்டுக் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின்படி, பல்வேறு சூழ்நிலைகளில் குறைகளால் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் வாழ்க்கையை மறுவாழ்வளிக்க உதவுவதற்காக கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், 2016 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாடுகளின்படி, காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னர், பதிவாளர் நாயகம் மரணம் அல்லது காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழை வழங்குகிறார்.

இதன்படி, நீதியமைச்சர் 100,000, ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்பித்தார். பதிவாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட காணாமற்போன நபரின் சான்றிதழை வைத்திருக்கும் காணாமல் போன நபரின் குடும்பத்தின் நெருங்கிய உறவினருக்கு இத்தொகை வழங்கப்படவுள்ளது.
புதியது பழையவை