தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு இலங்கை அரசால் தீர்வு கிடைக்காது

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு இலங்கை அரசால் தீர்வு கிடைக்காது என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.வல்வெட்டித்துறையிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் எதுவுமே இலங்கை அரசால் இதுவரை செய்யப்பட்டதில்லை.
அப்படியே செய்யப்பட்டாலும் அது அழுத்தம் காரணமாகச் செய்யப்பட்டதாக இருக்கும்.
இனிமேலும் சர்வதேச அழுத்தம் காரணமாக மட்டும் தான் எமக்கு ஒரு தீர்வு கிடைக்கும். அதை நோக்கி நாங்கள் பயணிக்க வேண்டும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை