மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவு தினம் நாளை 31ஆம் திகதி காலை 10.00மணியளவில் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாகவுள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் நடைபெறவுள்ளது.
மட்டு.ஊடக அமையம்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
நாளை 31ஆம் திகதி காலை 10.00மணியளவில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் மற்றும் மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்,மதத்தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2004ஆம்ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து ஆயுதக்குழுவொன்றினால் ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
