அமெரிக்க, இந்திய மற்றும் ஜப்பானிய தலைவர்களை சந்திக்க அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் நடவடிக்கை

அமெரிக்க, இந்திய மற்றும் ஜப்பானிய தலைவர்களை சந்திக்கவுள்ளதாக அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அறிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள Anthony Albanese அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில் ஜப்பானில் இடம்பெறவுள்ள Quad அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் பயணமாகவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய அமெரிக்க, இந்திய மற்றும் ஜப்பானிய தலைவர்களை நாளை மறுதினம் சந்திக்கவுள்ளதாக அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் Anthony Albanese குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் Anthony Albaneseக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவுஸ்திரேலியாவுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை முன்னெடுக்க அமெரிக்கா இணங்கியுள்ளது.

வட கொரியா தொடர்ந்து ஏவுகணை பரிசோதனைகளை முன்னெடுத்து வரும் நிலையில் இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில், Quad அமைப்பின் கூட்டத்துக்கு முன்னதாக ஜப்பான் பிரதமரைச் சந்திக்கும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று ஜப்பானுக்குப் பயணமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
புதியது பழையவை