கிழக்கு மாகாணத்தில் இன்னும் மக்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலமைக்கு வரவில்லை கௌரவிப்பு விழாவில் - செயலாளர் கோபாலரெட்ணம்

பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக பதவியுயர்வு பெற்ற மூத்ததம்பி கோபாலரெட்ணம் அவர்களுக்கான கௌரவிப்பு விழா மே (21) தேற்றாத்தீவு பாலமுருகன் ஆலயமுன்றலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் செயலாளர் உரையாற்றுகையில்..
கிழக்கு மாகாணத்தில் மக்ககள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைமைக்கு இன்னும் வரவில்லை அதனை நீங்கள் உங்கள் உற்பத்தியின் மூலம் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

இன மத பேதமென்றில்லாமல் ஒரு மனிதனுக்கு பிரச்சனை ஒன்று வருமாக இருந்தால் என்னால் தீர்க்க முடியாவிட்டாலும் இதற்கான வழிகளைக் காட்டி அதனை தீர்ப்பதற்கான வழிகளை மேற்கொள்வதுதான் முடிவாக இருக்கும் என்றார்.

தேற்றாத்தீவு ஆலய நிருவாகசபை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரி சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளைநாயகம்,தேற்றாத்தீவு ஆலய நிருவாக சபையினர் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தினர், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

புதியது பழையவை