பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற குழுக் கூட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று (30) நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

21ஆவது திருத்தச் சட்டத்தை ஆராய்வதற்காக சட்டத்தரணிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிக்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தீர்மானித்துள்ளது.
புதியது பழையவை