மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய சபாநாயகருமான முகம்மது நசீதுக்கும் (Mohamed Nasheed), எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் (Sajith Premadasa) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது நேற்று சனிக்கிழமை (21-05-2022) எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அதிலிருந்து மீள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
