இலங்கையில் யானைகளின் அதிகூடிய கஜமுத்துகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

75 யானை முத்துக்களை வைத்திருந்த ஒருவரை, இக்கினியாகல பிரதேசத்தில் வைத்து நேற்று சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

அம்பாறை முகாமில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டார்.

இலங்கையின் வரலாற்றில் கைப்பற்றப்பட்ட அதிக எண்ணிக்கையான யானை கஜமுத்துகள் இவையாகும்.

கைதுசெய்யப்பட்ட அம்பாறையைச் சேர்ந்த 67 வயதுடையவர், மேலதிக விசாரணைகளுக்காக இகினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
புதியது பழையவை