திருகோணமலையில் - மோட்டார்சைக்கிளுக்கு தீ வைப்பு

திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார்சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று (29) இடம்பெற்றுள்ளது.
முள்ளிப்பொத்தானை - ஹிஜ்ரா நகர் பகுதியில் வசித்து வரும் முஹம்மட் பரீட் என்பவருடைய பல்சர் 150 ரக மோட்டார்சைக்கிளுக்கே தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தீ வைக்கப்பட்டதாக பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை