இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 17 இலட்சம் ரூபாய பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 17 இலட்சம் ரூபாய பீடி இலைகளை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சமீப காலமாக மஞ்சள், பீடி இலை, போதைப்பொருட்கள், களைக்கொல்லி மருந்து உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தூத்துக்குடி தருவைகுளம் அருகே உள்ள கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பொலிஸார் இரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டபோது, சந்தேக சபர்கள் படகிலிருந்து குறித்த பீடி இலை மூட்டைகளை கடலில் தூக்கிவீசிவிட்டு, தப்பித்துச் சென்றுள்ளனர்.

இதில், மொத்தமாக 38 மூட்டைகள் காணப்பட்டதாகவும் ஒவ்வொரு மூட்டையிலும் சுமார் 45 கிலோ எடை கொண்ட பீடிஇலைகள் இருந்ததாகவும், மொத்தமாக 1,700 கிலோ பீடி இலைகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் இலங்கை மதிப்பு சுமார் 17 இலட்சம் ரூபாய் என்றும் கூறப்படுகிறது.

மேலும், தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை