மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் 34வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.
படையினரால் மக்கள் அழிக்கப்பட்டார்கள், சுற்றிவளைப்புக்கள், கைது செய்து விசாரணையின்றி அடைத்து வைத்தல் போன்ற பல்வேறு மக்களின் துன்ப துயரங்களிற்கு துணிந்து களமிறங்கி சேவை செய்த அருட்தந்தை சந்திரா பெர்ணாண்டோ தமிழ் தேசிய விடுதலையை உள்ளுணர்வோடு நேசித்ததனால் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஏற்றுக் கொண்டவராக காணப்பட்டார்.
தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் இலக்கு நோக்கி பயணிக்க ஆரம்பித்த காலத்தில், 1988 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
அருட்தந்தை சந்திரா பெர்ணாண்டோ 34 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று காலை அவரது சமாதி அமைந்துள்ள புனித மரியால் தேவாலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன் போது சமாதியில் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அருட்தந்தையின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அஞ்சலி உரைகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வினை மட்டக்களப்பு மாவட்ட பல் சமயங்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.



