வடக்குகிழக்கில் படையினர் அடக்குமுறை - நிறுத்தமாறு செல்வம் அடைக்கலநாதன்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைத்த உணவுகள் எவ்வாறு பகிரப்படுகின்றன என்பது தொடர்பாக நாடாளுமன்றில் தெளிவுப்படுத்தப்படவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்தக் கோரிக்கையை இன்று விடுத்தார்.
இதேவேளை வடக்குகிழக்கில் இன்று படையினர் நிலங்களை கைப்பற்றி விவசாயம் செய்கின்றார்கள்.

அத்துடன் படையினர் மக்களை தொடர்ந்தும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றார்கள் என்றும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்
அதேநேரம் முப்படையினர் அதிகமாக உள்ள இடங்களிலேயே அதிகளவான கடத்தல்கள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது ஒரு அடக்குமுறையாகும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
புதியது பழையவை