தொலைத்தொடர்பு வரித் திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுல்.

தொலைத்தொடர்பு வரித் திருத்தத்தை அமுலாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய 11 தசம் 25 வீதமாகக் காணப்பட்ட தொலைத்தொடர்பு வரி 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரி 12 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் தொலைத்தொடர்பு வரித் திருத்தம் அமுலாக்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதியது பழையவை