உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் அமைச்சின் வளாகத்தில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் இன்று (03) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இவ்வேலைத்திட்டத்தை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆரம்பித்து வைத்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் முன்னோடி திட்டமாக மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்கால உணவு நெருக்கடியை ஓரளவாவது இதன்மூலம் நிவர்த்திக்க முடியுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.