மட்டக்க்ளப்பு கரடியனாறு ஈரளகுளம் குடாவெட்டையில் இன்று அதிகாலை காட்;டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கரடியணாறு குடாவெட்டையைச் சேர்ந்த 62 வயதுடைய தேவராணி என்ற 5 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கோயிலுக்கு சென்று வீடு திரும்பும் வழியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
சடலம் மாவடிவெம்பு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் சட்ட வைத்திய அதிகாரியின உடற் கூற்றாய்வறிக்கைக்காக செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
ஏறாவூர் பிரதேச திடிர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் குறித்த மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.