கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் மண்முனை தென் மேற்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டி நிகழ்வுகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற பாடசாலைகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மேற்கு கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

மண்முனை தென் மேற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எம் .உதயகுமார் தலைமையில் நடைபெற்ற கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தமிழ் மொழி போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் கலந்துகொண்டதுடன், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய திட்டமிடல் பிரதிபணிப்பாளர் யோ சா சஜீவன் , மண்முனை மேற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் கே . முருகேசபிள்ளை மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலக ஆசிரியர் ஆலோசகர்கள் .பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது 2022 ஆம் ஆண்டுக்கான மண்முனை தென் மேற்கு கல்வி கோட்டத்தின் தமிழ் மொழி தின போட்டிகளில் வெற்றிபெற்ற பாடசாலைகள் பாராட்டப்பட்டதுடன் போட்டிகளில் முதல் இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான சாண்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் மாணவர்களில் இலக்கிய கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை