மட்டக்களப்பு - செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலய கதவு திறத்தல்

கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலயத்தில் இவ்வருடத்திற்கான கதவு திறத்தல் சடங்கு நேற்று (10)வெள்ளிக்கிழமை மாலை கிரான்குள மக்களினால் வெகுசிறப்பான முறையில் இடம் பெற்றது.

இன்று(11)ஞாயிற்றுக்கிழமை பகல் கல்யாண சடங்கினை தேற்றாத்தீவு கிராம மக்களின் ஏற்பாட்டிலும், இன்று இரவு
பூரணகும்பம் சடங்கிற்கு நெல் கொண்டுவருதல் நிகழ்வு, தேற்றாத்தீவு குடியிருப்பு மக்களின் ஏற்பாட்டிலும், நாளைமறுதினம்(13) திங்கட்கிழமை திருக்குளித்தில் சடங்கினை களுதாவளை கிராம மக்களின் ஏற்பாட்டிலும் இடம்பெறவுள்ளது.

இச்சடங்குகள் ஆலயத்தின் பிரதம கட்டாடாடி சிவஸ்ரீ க .கு.தேவராசா குருக்களின் தலைமையில் இடம் பெறவுள்ளது.

கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலயம் மட்டக்களப்பில் கஜபாகு மன்னனது காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பழம்பெரும் ஆலயமாகும். இங்கு கிரான்குளம், குருக்கள்மடம், செட்டிபாளையம், மாங்காடு, தேற்றாத்தீவு மற்றும் களுதாவளை என ஆறு கிராமங்களை சேர்ந்த மக்களால் ஒன்றிணைத்து சடங்கு வைபவங்கள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை