லாஃப் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

லாஃப் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 6,850 ரூபாவாகவும், 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 2,740 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

3500 மெட்ரிக் தொன் லாஃப் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நேற்று வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குறித்த சமையல் எரிவாயு கொள்கலன்களை மக்களுக்கு உடனடியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.
புதியது பழையவை