கதிர்காமத்திற்கான பாதயாத்திரை தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து இன்று காலை ஆரம்பமாகியது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று நூற்றுக்கணக்கான முருக பக்தர்களின் பங்குபற்றுதலுடன் பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முருகனின் வேலினை பாதயாத்திரையாக எடுத்துச்சென்று கதிர்காம கந்தனை பக்தர்கள் வழிபடுவது வழமையாகும்.


