மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றுக்குப் பின்னாலிருந்து கைக்குண்டு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் பின்பகுதியில் கழிவுகளை அகற்றுவதற்கான குழி ஒன்றை வெட்டி கொண்டிருந்த போது மண்ணில் புதைந்து கிடந்த நிலையில் கைக்குண்டு ஒன்று காணப்பட்டுள்ளது இதையடுத்து ஹோட்டல் உரிமையாளர் காத்தான்குடி பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த இடத்துக்கு வந்த காத்தான்குடி பொலிசார் கைக்குண்டை மீட்டதுடன் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
