குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அரச பொது விடுமுறை இரத்து

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமைக்காரியாலயம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய காரியாலயங்களும் எதிர்வரும் 13 ஆம் திகதி திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு எதிர்வரும் 13 ஆம் திகதி அரச பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

எனினும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமைக்காரியாலயம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய காரியாலயங்களும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை