மட்டக்களப்பில் - எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் காத்திருப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருளின் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்களும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

மட்டக்களப்பு நகரில் வாரத்தில் ஒரு முறைமட்டுமே குறித்த ஒரு எரிபொருள் வழங்கு நிலையத்தில் ஊடாக நபர் ஒருவருக்கு 500 ரூபாவிற்கு மட்டும் மண்ணெண்ணெய் வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஒரு குடும்பத்தின் தேவைகளுக்கு போதுமானதாக இல்லாத காரணத்தால் பாடசாலைக்கு செல்லும் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாது மண்ணெண்ணெய் பெறுவதற்கு பிள்ளைகளை அழைத்து வருவதாக பெற்றோர்கள் தெரிவிக்கினற்னர்.

இவ்வாறான நிலை தொடருமாக இருந்தால் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளும் தமது தொழிலும் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு நகரில் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய்யினை பெற்றுக்கொள்வதற்கு பெருமளவானோர் பெரும் நீண்ட வரிசையில் பலமணிநேரம் காத்திருந்து 500 ரூபாவிற்கு மண்ணெண்ணெய்யினை சிலர் பெற்றுக்கொண்ட போதிலும் பலர் மண்ணெண்ணெய் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.

சமையல் எரிவாய்வு உட்பட எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவும் அதேவேளை, இரவு நேரங்ககளின் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் மண்ணெண்ணெய் மூலமாக தமது அன்றாட சமையல் மற்றும் இரவுநேரத்தில் விளக்குகளின் தேவைகளுக்கான மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்வதிலும் மக்கள் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை