கிழக்கு மாகாணத்தில் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு, கோவில்போரதீவு ஸ்ரீகண்ணகியம்மன் ஆலயத்தின் திருச்சடங்கு சிறப்பாக நடைபெற்றது.
கிழக்கில் உள்ள கண்ணகியம்மன் ஆலயங்களின் வழிபாட்டு முறைகளுக்கு அமைய சிறப்புபெற்றதாக ஆலயத்தில் சிறப்பாக வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
குடிகளுக்குரிய தினங்களாக திருச்சடங்கு நடைபெற்றுவருவதுடன் ஒவ்வொரு குடி மக்களும் தங்களது வீடுகளிலிருந்து பூஜை பொருட்களை ஊர்வலமாக கொண்டுசென்று இந்த திருச்சடங்கினை சிறப்பிக்கும் வகையில் சடங்கு முன்னெடுக்கப்படுகின்றது.
இன்றைய தினம் ஆலயத்தில் கலிங்க குல மக்களினால் திருக்குளிர்த்தி நடாத்தப்பட்டதுடன் நேற்றைய தினம் படையாட்சி குடி மக்களினால் திருச்சடங்கு சிறப்பாக நடாத்தப்பட்டது.



