நாளையதினம் எரிபொருளை பெறவுள்ள வாகன இறுதி இலக்கங்கள் அறிவிப்பு

வாகனத்தின் பதிவு இலக்கத்தின் கடைசி இலக்கம் மற்றும் அதற்குரிய திகதியின்படி, நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் நாளை (21) ஆரம்பிக்கப்படும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ இன்று (20) பிற்பகல் இதனைத் தெரிவித்தார்.

'தேசிய எரிபொருள் உரிமம்' பொருந்தாது 

ஆரம்பிக்கப்படவுள்ள எரிபொருளின் விநியோகத்திற்கு 'தேசிய எரிபொருள் உரிமம்' பொருந்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகனப் பதிவு எண்ணின் கடைசி இலக்கமான 3, 4, 5 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகனங்கள் மாத்திரம் நாளையதினம் எரிபொருள் பெற வருமாறு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.  
புதியது பழையவை