பெட்ரோல் திருடிய போது தீப்பற்றிய மோட்டார் சைக்கிள் - மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி - 01, சீனிப்போடியார் வீதியிலுள்ள வீடொன்றிலே இச்சம்பவம் நேற்று (5) காலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டு முன்றலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்த பெட்ரோலை திருடன் ஒருவன் திருடும் போது வெளிச்சத்தை ஏற்படுத்த சிகரெட் லைட்டரை பயன்படுத்திய போது மோட்டார் சைக்கிள் தீப்பற்றியுள்ளதுடன், வீட்டின் கூரை மற்றும் கதவு, ஜன்னல்கலும் தீப்பற்றி எரிந்துள்ளன.

மோட்டார் சைக்கிள் தீப்பற்றிய போது அதனைத் திருடன் அனைப்பதற்காக தண்ணீர் என்று நினைத்து வாளியொன்றிலிருந்த பெயின்ட் பூசும் டின்னரை மோட்டார் சைக்கிளில் ஊற்றிய போது மோட்டார் சைக்கிள் வேகமாகத் தீப்பற்றியுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு தீப்பற்றிய போது மோட்டார் சைக்கிள் எரிகிறது எழும்புங்கள் என்று கூக்குரல் ஒன்று கேட்டவுடன் தாம் எழுந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை