ஒரு முட்டையை 50 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் துமிஷ்க சுபசிங்க தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் உட்பட பல சங்கங்களுக்கு இடையில் இன்று (24) பிற்பகல் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுடன் முட்டை விலையில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றபோதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு வாரங்களில் இந்தப் பிரச்சினைக்கு திட்டவட்டமான தீர்வு வழங்கப்படும் என இதன் போது வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
