ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

ஹெட்டன் மல்லிகைப்பூ சந்தியில் ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவமானது ஹெட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு பதுளை பிரதான ரயில் பாதையில் ஹெட்டன் மல்லிகைப்பூ சந்தி பகுதியில் இன்று காலை இடம் பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடதக்கது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை