மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நீண்டநாட்களின் பின்பு தற்போது பரவி வரும் கொவிட்-19 தொற்றின் காரணமாக வயோதிபர் ஒருவர் நேற்று (10) மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த நபர் மட்டக்களப்பு விக்டோறியா லேனைச் சேர்ந்த மாசிலாமணி (83) வயது என அடையாளம் காணப்பட்டதோடு இவர் கடந்த திங்கட்கிழமை (8) நீரிழிவு நோய்காரணமாக விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரை கொவிட்-19 பரிசோதிக்கப்பட்டபோது தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மரணமானவரின் உடலை கொவிட் தொற்றில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுகாதார விதிமுறைகளுக்கமைவான அடக்கம் செய்வதற்கு வைத்தியசாலையினால் மேற்கொள்ளப்பட்டது.
எனவே எதிர்வரும் காலங்களில் வைத்தியசாலைக்கு வருவோர் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து கட்டாயம் முகக்கவசம் அணிந்து வருமாறு பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
