சைக்கிளொன்றை நிறுத்தி வைத்திருந்த சிறுவன் ஒருவன் காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை – மாலமுல்ல – பொகுண சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக வகுப்புக்கு சென்ற குறித்த 14 வயது மாணவன் வீதிக்கு அருகில் தனது சைக்கிளை நிறுத்தி வைத்திருந்த சந்தர்ப்பத்தில் பெண் ஒருவர் செலுத்திய கார் வீதியை விட்டு விலகி மாணவனை மோதிவிட்டு முன்னோக்கி பயணித்துள்ளது.
