நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மத்திய ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படும்.

கடற் பிராந்தியங்களை பொறுத்தவரையில் கொழும்பு முதல் காலி வரையான அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

காற்றின் வேகமானது மணிக்கு 20 -30 கிலோ மீற்றர் வேகத்தில் தென்மேற்கு திசையில் வீசுக்கூடும்.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும்.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.வா
புதியது பழையவை