கோழி இறைச்சி மற்றும் முட்டைகளில் விலை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை கோழி இறைச்சி விற்பனையாளர்களின் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
கோழி இறைச்சி மற்றும் கோழி முட்டைக்கான உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைக்காமையே இதற்கு பிரதான காரணம் எனவும் அந்த சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய கோழி வளர்ப்பிற்கு தேவையான மூலப்பொருளை இறக்குமதி செய்வதற்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும், பொருளாதார நெருக்கடிக்கு மத்தயில் அரசாங்கம் இதனை கவனத்தில் கொள்ளாமைய காரணம் எனவும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் கோழி முட்டையின் விலை 70 ரூபாய் வரை அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அகில இலங்கை கோழி இறைச்சி விற்பனையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
