முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தடை செப்டெம்பர் 5 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவின் பிரதிவாதிகளாக குறித்த இருவரும் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மனு இன்று உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
