09 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேநீர் விருந்துக்கான செலவு அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
09 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு ஓகஸ்ட் 3 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட பின்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விருந்தளித்தார்.
இந்த விருந்திற்கான செலவு 272,000 ரூபாவை ரணில் விக்ரமசிங்க தனது தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தி செலுத்தியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் சார்பில் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அதிபரின் செயலாளரான ஆஷு மாரசிங்க இதற்கான கட்டணத்தை செலுத்தியுள்ளார்.

