நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழை

நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒரு சில இடங்களில்  75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில்  இடியுடன் கூடிய மழைபெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை