இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அமெரிக்கா நன்கொடை

இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உணவு அளிப்பதற்காக 3,000 மெட்ரிக் டொன் உணவினை நன்கொடையாக அமெரிக்கா வழங்கியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கினை வழங்குவதற்காக அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் ஊடாக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்காமலிருக்க அமெரிக்கா இந்த உதவியினை வழங்கியுள்ளது.

அத்துடன் இலங்கைக்கு 320 மெட்றிக் டொன் கடலை பருப்பும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங், மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
புதியது பழையவை